சீவக சிந்தாமணி 871 - 875 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 871 - 875 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

871. கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப்
பூக்கணம் பொழில் பட்டது போன்றதே

விளக்கவுரை :

872. கூறப் பட்ட அக் கொய்ம் மலர்க் காவகம்
ஊறித் தேன் துளித்து ஒண் மது ஆர் மணம்
நாறி நாள் மலர் வெண் மணல் தாய் நிழல்
தேறித் தெண் கயம் புக்கது போன்றதே

விளக்கவுரை :


[ads-post]

873. காவில் கண்டத் திரை வளைத்து ஆயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம்
பூவையும் கிளியும் மிழற்றப் புகுந்து
ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே

விளக்கவுரை :

874. பௌவ நீர்ப் பவளக் கொடி போல்பவள்
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய்க் குணமாலை யோடு
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள்

விளக்கவுரை :

875. தூமம் சூடிய தூத் துகில் ஏந்து அல்குல்
தாமம் சூடிய வேல்தடம் கண்ணினாள்
நாமம் சூடிய நல்நுதல் நீட்டினாள்
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books