சீவக சிந்தாமணி 1041 - 1045 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1041 - 1045 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1041. கொடுஞ் சிலையான் ஓலை குண மாலை காண்க
அடுந் துயரம் உள் சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன்
நெடுங் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக

விளக்கவுரை :

1042. ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ங் குவளைப் பைந் தடம் சூழ்
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென்தோள்
பூட்டார் சிலை நுதலாள் புல்லாது ஒழியேனே

விளக்கவுரை :

[ads-post]

1043. குங்குமம் சேர் வெம் முலைமேல் கொய்தார் வடுப் பொறிப்பச்
செங் கயல் கண் வெம் பனியால் சிந்தை எரி அவித்து
மங்கை மகிழ உறையேனேல் வாள் அமருள்
பங்கப் பட்டார் மேல் படை நினைந்தேன் ஆக என்றான்

விளக்கவுரை :

1044. நூல் புடைத்தால் போல் கிடந்த வித்தகம் சேர் நுண் வரிகள்
பால் மடுத்துத் தீம் தேன் பருகுவாள் போல் நோக்கிச்
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம் மகிழ்ந்து
மால் படுத்தான் மார்பில் மணந்தாளே போல் மகிழ்ந்தாள்

விளக்கவுரை :

1045. பால் அவியும் பூவும் புகையும் படு சாந்தும்
கால் அவியாப் பொன் விளக்கும் தந்து உம்மைக் கை தொழுவேன்
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே
நூல் அவையார் போல் நீங்கள் நோக்குமினே என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books