சீவக சிந்தாமணி 451 - 455 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

451. மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை
கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே.

விளக்கவுரை :

452. கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும்
ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே.

விளக்கவுரை :

[ads-post]

453. ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்.

விளக்கவுரை :

454. வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக்
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான்.

விளக்கவுரை :

455. ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 446 - 450 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்

446. மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே.

விளக்கவுரை :

சீவகன் வேடர்களுடன் போரிடுதல்


447. கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே.

விளக்கவுரை :


[ads-post]

448. கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே.

விளக்கவுரை :

வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்


449. ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்.

விளக்கவுரை :

450. புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 441 - 445 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

சீவகன் போருக்கு எழுதல்

441. வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்.

விளக்கவுரை :

442. கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும்
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித்
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே.

விளக்கவுரை :

[ads-post]

443. தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்.

விளக்கவுரை :

444. போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித்
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே.

விளக்கவுரை :

நிமித்திகன் வேடரைத் தடுத்தல்


445. இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்தான் மொழிந்தான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 436 - 440 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

436. வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக்
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால்
வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே.

விளக்கவுரை :

437. வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே.

விளக்கவுரை :

[ads-post]

438. பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த
முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான்.

விளக்கவுரை :

439. வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார்.

விளக்கவுரை :

நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல்


440. மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள்கண்
பொன் இழை சுடரும் மேனிப் பூங் கொடி அனைய பொற்பில்
கன்னியைத் தருதும் என்று கடி முரசு இயம்பக் கொட்டி
நல் நகர் வீதி தோறும் நந்த கோன் அறை வித்தானே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 431 - 435 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

கட்டியங்காரன் படை தோல்வியுறல்

431. செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்.

விளக்கவுரை :

432. கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே.

விளக்கவுரை :

[ads-post]

433. கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே.

விளக்கவுரை :

434. கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப்
பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார்.

விளக்கவுரை :

435. வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச்
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக்
கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 426 - 430 of 3145 பாடல்கள்
 
seevaga-chinthamani

426. பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே.

விளக்கவுரை :

கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல்


427. புறவு அணி பூ விரி புன் புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச்
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல்.

விளக்கவுரை :

[ads-post]

428. கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே.

விளக்கவுரை :

429. காசு இல் மா மணிச் சாமரை கன்னியர்
வீசு மா மகரக் குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்.

விளக்கவுரை :

430. கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக்
கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 421 - 425 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

வேடர்கள் ஆநிரை கவர்தல்

421. காய மீன் எனக் கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரிபோல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்.

விளக்கவுரை :


422. குழலும் நவியமும் ஒழியக் கோவலர்
சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார்.

விளக்கவுரை :

[ads-post]

423. மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர்ப் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்.

விளக்கவுரை :

424. வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம்
முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலைப் படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார்.

விளக்கவுரை :

425. எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத்
தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 416 - 420 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

416. அடைதும் நாம் நிரை அடைந்த காலையே
குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே.

விளக்கவுரை :

417. என்று கூறலும் 'ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக' என்று ஏகினார்.

விளக்கவுரை :

[ads-post]

418. வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த காலையே.

விளக்கவுரை :

தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல்


419. பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினான்
வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான்.

விளக்கவுரை :

420. பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 411 - 415 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

411. கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணைச் செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ்
உலகினில் இலை என ஒருவன் ஆயினான்.

விளக்கவுரை :

412. நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக்
காமனே எனக் கன்னி மங்கையர்
தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம்
கோ மகன் திறத்து உற்ற கூறுவாம்.

விளக்கவுரை :


[ads-post]

வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல்


413. சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை
புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும்
கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே.

விளக்கவுரை :

414. மிக்க நாளினால் வேழம் மும் மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்.

விளக்கவுரை :

வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல்


415. மன்னவன் நிரை வந்து கண் உறும்
இன்ன நாளினால் கோடும் நாம் எனச்
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 406 - 410 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

406. மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்.

விளக்கவுரை :

407. கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான்.

விளக்கவுரை :

[ads-post]

408. அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்.

விளக்கவுரை :

நாமகள் இலம்பகம் முற்றியது

கோவிந்தையார் இலம்பகம்

அச்சணந்தி பிறவி நீத்தல்


409. ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச்
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்.

விளக்கவுரை :

சீவகன் குமரன் ஆதல்


410. நம்பன் இத் தலை நாக நல் நகர்
பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே.

விளக்கவுரை :
Powered by Blogger.