சீவக சிந்தாமணி 406 - 410 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 406 - 410 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

406. மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்.

விளக்கவுரை :

407. கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான்.

விளக்கவுரை :

[ads-post]

408. அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்.

விளக்கவுரை :

நாமகள் இலம்பகம் முற்றியது

கோவிந்தையார் இலம்பகம்

அச்சணந்தி பிறவி நீத்தல்


409. ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச்
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்.

விளக்கவுரை :

சீவகன் குமரன் ஆதல்


410. நம்பன் இத் தலை நாக நல் நகர்
பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books