சீவக சிந்தாமணி 501 - 505 of 3145 பாடல்கள்
501. ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபடச் செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்க்
கோடு பறை ஆர்ப்பக் கொழுந் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே.
விளக்கவுரை :
502. திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம்
கரை கடலுள் காலக் கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது எனக் கீறி வளர் தீவின்
நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ.
விளக்கவுரை :
[ads-post]
503. மின்னும் மிளிர் பூங் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே.
விளக்கவுரை :
504. தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலும் திருமுத்தாரம்
கோவினைக் குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்.
விளக்கவுரை :
505. புணர்ந்தவர் பிரிதல் ஆற்றாப்போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்றகொழுநிதிக் குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 501 - 505 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books