சீவக சிந்தாமணி 576 - 580 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 576 - 580 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

576. ஈர் அலங்கல் ஏந்து வேல், ஆர் அலங்கல் மார்பினான்
கார் கலந்த கைக் கணி, சீர் கலந்து செப்பினான்

விளக்கவுரை :

577. மாதர் வாழ்வு மண்ணதே, ஆதலால் அலங்கல் அம்
தாது அவிழ்ந்த மார்ப நின், காதலன் கடல் உளான்

விளக்கவுரை :

[ads-post]

578. என்று கூற என்னையே, துன்று காதல் தோழனைச்
சென்று நீ கொணர்க என, அன்று வந்த வண்ணமே

விளக்கவுரை :

579. துன்பம் உற்றவர்க்கு அலால், இன்பம் இல்லை ஆதலின்
அன்ப மற்று யான் நினைத், துன்பத்தால் தொடக்கினேன்

விளக்கவுரை :

580. பீழை செய்து பெற்றனன், வாழி என்று மாக்கடல்
ஆழ்வித்து இட்ட அம்பியைத், தோழர்ச் சுட்டிக் காட்டினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books