சீவக சிந்தாமணி 621 - 625 of 3145 பாடல்கள்
621. பசும் கதிர்க் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழுநிதி சிதறினானே
விளக்கவுரை :
622. வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்பப்
பூசி வெள்ளி லோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளைக் காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அறத் திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ் வித்தாரே
விளக்கவுரை :
[ads-post]
623. கங்கையின் களிற்றின் உச்சிக் கதிர் மணிக்குடத்தில் தந்த
மங்கல வாச நல்நீர் மணிநிறம் கழீஇயது ஒப்ப
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி
அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார்
விளக்கவுரை :
624. வெண் நிற மழையின் மின்போல் வெண் துகில் கலாபம் வீக்கிக்
கண் நிறம் முலையும் தோளும் சந்தனத் தேய்வை கொட்டித்
தௌ நிறச் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
பண் நிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்
விளக்கவுரை :
625. எரிமணிச் சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தித்
திருமணி முலையின் நெற்றிச் சிறு புறம் செறியத் தீட்டிப்
புரிமணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரிமணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 621 - 625 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books