சீவக சிந்தாமணி 521 - 525 of 3145 பாடல்கள்
521. உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
வரை அகம் ஏற வலிமின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றிக்
குரை கழல் மைந்தனைக் கொண்டு பறந்தான்
விளக்கவுரை :
522. விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
நயந்தனர் போகி நறு மலர்ச் சோலை
அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார்
விளக்கவுரை :
[ads-post]
523. கண்டால் இனியன காண்டற்கு அரியன
தண் தாமரை அவள் தாழும் தகையன
கொண்டான் கொழுங் கனி கோட்டு இடைத் தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்
விளக்கவுரை :
524. மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தனச் சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்
விளக்கவுரை :
525. கோதை அருவிக் குளிர் வரை மேல் நின்று
காதம் கடந்த பின் கன்னிக் கொடிமதில்
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்குப்
போதும் எழுக எனப் போயினர் சார்ந்தார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 521 - 525 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books