சீவக சிந்தாமணி 671 - 675 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 671 - 675 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

671. ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணிக் குழையும் முத்தும்
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான்

விளக்கவுரை :

672. கடி அரங்கு அணிந்து மூதூர்க் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான்
குடை உடையவனொடு எண்ணிச் சீவகன் கொணர்மின் என்னத்
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காணச் சென்றார்

விளக்கவுரை :

[ads-post]

673. நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடிக் கோதை சூட்டி
அலர் முலைக் குருதிச் சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்திக்
குலவிய குருதிப் பட்டின் கலைநலம் கொளுத்தி இட்டான்

விளக்கவுரை :

674. திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம் பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கிப்
பரி அகம் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான்

விளக்கவுரை :

675. தோல் பொலி முழவும் துளை பயில் குழலும் ஏங்கக்
காற்கு ஒசி கொம்பு போலப் போந்து கைத் தலங்கள் காட்டி
மேல் பட வெருவி நோக்கித் தானையை விட்டிட்டு ஒல்கித்
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books