சீவக சிந்தாமணி 401 - 405 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 401 - 405 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

401. சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான்.

விளக்கவுரை :

402. நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன்.

விளக்கவுரை :

[ads-post]

403. ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்.

விளக்கவுரை :

404. கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான்.

விளக்கவுரை :

அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்


405. கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books