சீவக சிந்தாமணி 656 - 660 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 656 - 660 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

656. உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
மறை ஒளி மணிச் சுவர் இடை இட்டு இத்தலை
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலைக்
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே

விளக்கவுரை :


657. சிலைத் தொழில் சிறு நுதல் தெய்வப் பாவை போல்
கலைத் தொழில் பட எழீஇ இப் பாடினாள் கனிந்து
இலைப் பொழில் குரங்கின ஈன்ற தூண்தளிர்
நிலத்து இடைப் பறவை மெய்ம் மறந்து வீழ்ந்தவே

விளக்கவுரை :

[ads-post]

658. கருங் கொடிப் புருவம் ஏறா கயல் நெடுங் கண்ணும் ஆடா
அருங் கடி மிடறும் விம்மாது அணிமணி எயிறும் தோன்றா
இரும் கடல் பவளச் செவ்வாய் திறந்து இவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்

விளக்கவுரை :

659. இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார்
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவிப் புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே

விளக்கவுரை :

660. மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
போதரப் பாடினாள் புகுந்த போயின
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books