சீவக சிந்தாமணி 366 - 370 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 366 - 370 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

366. சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்.

விளக்கவுரை :

367. நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்.

விளக்கவுரை :

[ads-post]

368. முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார்.

விளக்கவுரை :

சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்


369. அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே.

விளக்கவுரை :

370. நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books