சீவக சிந்தாமணி 456 - 460 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 456 - 460 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்

456. இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார்.

விளக்கவுரை :


457. இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்.

விளக்கவுரை :

[ads-post]

458. சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச்
செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே.

விளக்கவுரை :

459. நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக்
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக்
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்.

விளக்கவுரை :

460. ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப்
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப்
பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books