சீவக சிந்தாமணி 531 - 535 of 3145 பாடல்கள்
531. செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
அம் பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே
விளக்கவுரை :
532. உருளி மாமதி ஓட்டு ஒழிதள்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே
விளக்கவுரை :
[ads-post]
533. அசும்பு பொன் வரை ஆய் மணிப் பூண்களும்
பசும் பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே
விளக்கவுரை :
534. தேன்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
ஆக்கப் பட்ட அளவில் கொழும் புகை
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே
விளக்கவுரை :
535. தப்பு இல் வாய் மொழித் தானவர் வைகிய
ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச்
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 531 - 535 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books