சீவக சிந்தாமணி 546 - 550 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 546 - 550 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

546. வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடிப் பாலில்
கள் அவிழ் கைதை வேலிக் காசு இல் காந்தார நாட்டுப்
புள் அணி கிடங்கின் விச்சா லோகமா நகரில் போகா
வெள்ளி வேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்

விளக்கவுரை :

547. சங்கு உடைந்த அனைய வெண் தாமரை மலர்த் தடங்கள் போலும்
நம் குடித் தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்னக்
கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

548. பெருந் தகைக் குருசில் தோழன் பெருவிலைக் கடகம் முன்கை
திருந்துபு வணங்கப் பற்றிச் சென்று தன் உரிமை காட்டப்
பொருந்துபு பொற்ப ஓம்பிப் பொன் இழை சுடர நின்ற
கருங் கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று நின்றான்

விளக்கவுரை :


549. எரி மணிப் பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி
அரு மணிக் கொடிகொல் மின்கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன்
திரு மணிக் கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான்

விளக்கவுரை :

550. தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்
வாச வான் குழலின் மின் போல் வரு முலைச் சாந்து நக்கி
ஊசல் பாய்ந்து ஆடிக் காதில் குண்டலம் இலங்க நின்றாள்
காசு இல் யாழ்க் கணம் கொள் தெய்வக் காந்தர்வ தத்தை என்பாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books