சீவக சிந்தாமணி 646 - 650 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 646 - 650 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

646. பைம் பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று
செம் பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழலச் சில் என்று
அம்பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூஞ்
செம்பொன் புரிசை அடைந்தாள் செந் தாமரை மேல் திருவோடு ஒப்பாள்

விளக்கவுரை :

647. பட்டு இயன்ற கண்டத் திரை வளைத்துப் பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலாச் சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறித் தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇப் பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

648. புன் காஞ்சித் தாது தன் புறம் புதையக் கிளி எனக் கண்டு
அன்பு கொள் மடப் பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்துத்
தன் பெடையைக் குயில் தழுவத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :
649. தண் காஞ்சித் தாது ஆடித் தன் நிறம் கரந்ததனைக்
கண்டு ஆனா மடப் பெடை கிளி எனப் போய்க் கை அகல
நுண்தூவி இளஞ் சேவல் நோக்கோடு விளி பயிற்றித்
தன் சிறகால் பெடை தழுவத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :

650. குறுத் தாள் குயில் சேவல் கொழுங் காஞ்சித் தாது ஆடி
வெறுத்து ஆங்கே மடப் பெடை விழைவு அகன்று நடப்பதனை
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி
உறுப்பினால் அடி பணியத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books