சீவக சிந்தாமணி 466 - 470 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 466 - 470 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

466. சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக்
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்.

விளக்கவுரை :

467. விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார்.

விளக்கவுரை :

[ads-post]

468. வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ
அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக்
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்.

விளக்கவுரை :

469. வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே.

விளக்கவுரை :

470. வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித்
தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books