சீவக சிந்தாமணி 601 - 605 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 601 - 605 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

601. அரைசனது அருளினொடு அகல்மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே

விளக்கவுரை :

602. விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
படு பணையவர் உறை பதி அது குறுகி
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
கடி நகர் இடி முரசு அறைமினம் எனவே

விளக்கவுரை :

[ads-post]

603. மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்

விளக்கவுரை :

604. வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
ஊன்றுக ஊழிதோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்

விளக்கவுரை :

605. தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பிப்
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈமின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அருந் தவம் முயல்மின் யாரும்
சிவம்புரி நெறியைச் சேரச் செப்பும் இப் பொருளும் கேள்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books