சீவக சிந்தாமணி 556 - 560 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 556 - 560 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

556. உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா
நெடுங் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின்
தடங் கணி தனிமை நீங்கத் தந்தையும் தாயும் ஆகி
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான்

விளக்கவுரை :


557. அரு மணி வயிரம் வேய்ந்த அருங் கலப் பேழை ஐந்நூறு
எரிமணி செம்பொன் ஆர்ந்த ஈர் ஆயிரம் யவனப் பேழை
திருமணி பூணினாற்குச் சினம் தலை மழுங்கல் இன்றிக்
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான்

விளக்கவுரை :


[ads-post]

558. பல் வினைப் பவளப் பாய் கால் பசுமணி இழிகை வம்பு ஆர்
நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலைக் கண்ணாடி
மெல்லிய தூபமுட்டி மேதகு நானச் செப்போடு அல்லவும்
கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான்

விளக்கவுரை :

559. விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வைத் தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அருஞ் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான்

விளக்கவுரை :

560. அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளைத் தோளினாளைப்
பரப்பு அமை கதல் தாயர் பற்பல் கால் புல்லிக் கொண்டு
திருப் புறக் கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில்
புரிக் குழல் மடந்தை போகப் புலம்பொடு மடிந்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books