சீவக சிந்தாமணி 666 - 670 of 3145 பாடல்கள்
666. தம்பியும் தோழன் மாரும் தானும் மற்று எண்ணிச் சூழ்ந்து
வெம்பிய வீணைப் போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அறப் புத்திசேன சொல் இது குரவற்கு என்னக்
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே
விளக்கவுரை :
667. ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம்பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்குக் கந்துகன் இதுவும் கூறும்
விளக்கவுரை :
[ads-post]
668. மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலைப்
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கிப் பைந்தாள் ஒண்மணிக் குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூக் கொண்டானே
விளக்கவுரை :
669. நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூங் குவளைப் போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி
வல்லிதில் சலாகை சுற்றி ஓலையை வாசிக் கின்றான்
விளக்கவுரை :
670. நம்பனை நகரின் நீக்கிச் சேமத்தால் வைக்க தீயுள்
செம் பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டிக் கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்குச் சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 666 - 670 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books