சீவக சிந்தாமணி 251 - 255 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 251 - 255 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

251. வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்.

விளக்கவுரை :


252. குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார்.

விளக்கவுரை :

[ads-post]

253. நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்.   

விளக்கவுரை :

254. பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்.

விளக்கவுரை :


255. கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books