சீவக சிந்தாமணி 486 - 490 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 486 - 490 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

486. கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார்.

விளக்கவுரை :

487. நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.

விளக்கவுரை :

[ads-post]

488. நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்.

விளக்கவுரை :

489. ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே.

விளக்கவுரை :

பதுமுகன் இன்பம் நுகர்தல்


490. நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன்
இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books