சீவக சிந்தாமணி 626 - 630 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 626 - 630 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

626. அருங் கயம் விசும்பில் பார்க்கும் அணிச் சிறு சிரலை அஞ்சி
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணிவில் காப்ப நீண்டு உலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
கருங் கயல் அல்ல கண்ணே எனக் கரி போக்கினாரே

விளக்கவுரை :
627. பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து
இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல்
திருந்தச் செய்து அதன்பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்

விளக்கவுரை :

[ads-post]

628. மண் கனை முழவம் விம்ம வரிவளை துவைப்ப வள்வார்க்
கண் கனைந்து இடியின் வெம்பிக் கடல் என முரசம் ஆர்ப்ப
விண் கனிந்து உருகு நீர்மை வெள்வளைத் தோளி போந்தாள்
பண் கனிந்து உருகு நல் யாழ்ப் படை பொருது உடைக்கல் உற்றே

விளக்கவுரை :

629. பரந்து ஒளி உமிழும் பைம் பொன் கண்ணடி பதாகை தோட்டி
விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு வெண்முரசு கும்பம்
சுரந்த வெண் மதியைச் சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும்
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே

விளக்கவுரை :


630. வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின்
நின்று எரி பசும் பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல்யாழ் போந்தன உருவம் மாலை
தின்று தேன் இசைகள் பாடத் திருநகர்ச் சுடர அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books