சீவக சிந்தாமணி 611 - 615 of 3145 பாடல்கள்
611. சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின் செய் கழல் நரல வீக்கி
மதக் களிறு அடர்த்துக் குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
கதக் களி ஒளிறு வைவேல் காம்பிலிக் காவல் மன்னன்
பதைப்பு அரும் பரும யானைப் பாலமா குமரன் வந்தான்
விளக்கவுரை :
612. இலை பொர எழுதி அன்ன எரிமணிக் கடக முன்கைச்
சிலை பொரத் திரண்ட திண்தோள் சில்லரிச் சிலம்பினார் தம்
முலை பொர உடைந்த தண்தார் மொய்ம் மதுத் துளிப்ப வந்தான்
மலை பொர அரிய மார்பின் வாரண வாசி மன்னன்
விளக்கவுரை :
[ads-post]
613. கதிர் முடி மன்னர் சூழ்ந்து கை தொழுது இறைஞ்சி மாலைத்
திருமுடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி
அருமுடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப
ஒரு பிடி நுசுப்பினானை உள்ளுபு வந்து விட்டான்
விளக்கவுரை :
614. வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர் தம் முடியில் கொண்ட
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள்
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல்
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான்
விளக்கவுரை :
615. நீள் நிதி வணிகர் ஈறா நிலமிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்க்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர்
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 611 - 615 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books