சீவக சிந்தாமணி 651 - 655 of 3145 பாடல்கள்
651. தளை அவிழ் கோதை பாடித் தான் அமர்ந்து இருப்பத் தோழி
விளை மதுக் கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண்
இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல்
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள்
விளக்கவுரை :
652. வேயே திரள் மென்தோள் வில்லே கொடும் புருவம் வாயே
வளர்பவளம் மாந்தளிரே மாமேனி நோயே முலை சுமப்பது
என்றார்க்கு அருகு இருந்தார் ஏ இவள் ஒருத்தி பேடியோ
என்றார் எரி மணீப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்
விளக்கவுரை :
[ads-post]
653. பலி கொண்டு பேராத பாசம் இவள் கண் ஒலி கொண்டு
உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே கலி கொண்டு
தேவர் முலை கரந்து வைத்தார் இலை கொண்ட பூணினீர் என்று
எழினி சேர்ந்தாள் இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்
விளக்கவுரை :
654. நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
கண்டு அறிகிலா இடைக் காம வல்லி யாழ்
கொண்டவர் குழாத்து இடைக் கொடியின் ஒல்கினாள்
விளக்கவுரை :
655. பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி பையவே
கிளிச் சொலின் இனியவர் நீக்கக் கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்கச் சென்று அணையில் ஏறினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 651 - 655 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books