சீவக சிந்தாமணி 596 - 600 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 596 - 600 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

596. காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
ஏம் உறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே

விளக்கவுரை :

597. உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
விழுங்கும் எனப் பறவைகளும் பிற விலங்கும் அடையா
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
எழுந்து கொடி ஆடும் இது அவ் எழில் நகரின் இயல்பே

விளக்கவுரை :


[ads-post]

598. ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்

விளக்கவுரை :


599. கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
கொண்டு உலகம் ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும்
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே

விளக்கவுரை :

600. முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
பகல் கதிர்ப் பரப்பிற்று ஆகிப் பஞ்சவர் விமானம் முட்டிப்
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books