சீவக சிந்தாமணி 256 - 260 of 3145 பாடல்கள்
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
256. தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி
நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான்.
விளக்கவுரை :
257. தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான்.
விளக்கவுரை :
[ads-post]
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
258. நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான்.
விளக்கவுரை :
259. என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான்.
விளக்கவுரை :
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
260. விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான்.
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 256 - 260 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books