சீவக சிந்தாமணி 471 - 475 of 3145 பாடல்கள்
471. பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி
இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே.
விளக்கவுரை :
472. இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார்.
விளக்கவுரை :
[ads-post]
473. தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக்
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்.
விளக்கவுரை :
நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்
474. தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்.
விளக்கவுரை :
475. கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான்.
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 471 - 475 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books