சீவக சிந்தாமணி 681 - 685 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 681 - 685 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

681. கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்குமச் சேறு ஆட்டினார்கள்
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்துகாண்பாரும் உளரே செங்கண்
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல்மதியோ வாள் முகமோ நோக்கிக் காணீர்

விளக்கவுரை :

682. நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல்கற்றை கண்டு நிறை
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள்ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றிப் பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகிக் கண் உருகி நெஞ்சு உருகிக் காம வெயில் வெண்ணெய்ப் பாவை போல் மெலிகின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

683. ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
ஓடு அரி நெடுங் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடிய வாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே

விளக்கவுரை :

684. வள மலர் அணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன்
இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்

விளக்கவுரை :

685. என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம்
சென்றமை குறிப்பில் தேறிக் கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கித் தன் கோயில் புக்கான்
மன்றல மடந்தை தன்னை வலிதில் கொண்டு ஒலிகொள் தாரான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books