சீவக சிந்தாமணி 661 - 665 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 661 - 665 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

661. சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்றபின்
நரம்பு உறு தௌவிளி நவின்ற நால் மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்

விளக்கவுரை :

662. திருமலர்க் கமலத்து அங் கண் தேனின் முரல்வது ஒப்ப
விரிமலர்க் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார்
எரிமலர்ப் பவளச் செவ்வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே

விளக்கவுரை :

[ads-post]

663. வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகிக்
கோல் பொரச் சிவந்த கோலக் குவிவிரல் மடந்தை வீணை
நூல் பொரப் புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ
கால் பொரக் கரிந்த காமர் பங்கயப் பழனம் ஒத்தார்

விளக்கவுரை :

664. தேன் உயர் மகரவீணைத் தீம் சுவை இவளை வெல்வான்
வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமன் ஆகும்
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலைக் கட்டியங் காரன் அன்றே

விளக்கவுரை :

665. மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடையப் பட்ட
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அந்நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books