சீவக சிந்தாமணி 606 - 610 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 606 - 610 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

606. அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம் உறு நுசுப்பு நைய வீற்று இருந்து அணங்கு சேர்ந்த
வெம் முலைப் பரவை அல்குல் மிடை மணிக் கலாபம் வேய்த் தோள்
செம் மலர்த் திருவின் சாயல் தேமொழி தத்தை என்பாள்

விளக்கவுரை :

607. மற்று அவள் தந்தை நாய்கன் வண்கைச் சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனைக் கனிக்கும் நீராள்

விளக்கவுரை :

[ads-post]

608. தீம் தொடை மகர வீணைத் தெளி விளி எடுப்பித் தேற்றிப்
பூந் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
ஈந்திடும் இறைவர் ஆதி மூவகைக் குலத்து உளார்க்கும்
வேந்தடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான்

விளக்கவுரை :

609. மண்ணக மடந்தை ஆகம் மார்பு உற முயங்கி நின்ற
அண்ணலை ஆதி ஆக அருங் கடி நகரை வாழ்த்தி
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடிமுரசு அறைந்த காலை

விளக்கவுரை :

610. வணக்க அருந் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த
நிணம் கொழுங் குருதி வாள் கை நிலம் புடை பெயர்க்கும் ஆற்றல்
அணைப்ப அரும் களிகொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
கணைக் கவின் அழித்த உண்கண் கன்னியைக் கருதி வந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books