சீவக சிந்தாமணி 516 - 520 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 516 - 520 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

516. ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
நீடிய நெய்தல் அம் கானல் நெடுந் தகை
வாடி இருந்தான் வரும்கலம் நோக்கா

விளக்கவுரை :

517. ஆளிய மொய்ம்பன் இரும் தவப் பூம் பொழில்
தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டுக்
கேளிர் எனக்கு உற்ற கேண்மின் நீர் எனத்
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

518. கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்

விளக்கவுரை :


519. மானும் மரனும் இரங்க மத வலி
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்

விளக்கவுரை :

520. விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books