சீவக சிந்தாமணி 276 - 280 of 3145 பாடல்கள்
276. அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான்.
விளக்கவுரை :
277. மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே.
விளக்கவுரை :
[ads-post]
278. சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.
விளக்கவுரை :
279. வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.
விளக்கவுரை :
280. உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 276 - 280 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books