சீவக சிந்தாமணி 676 - 680 of 3145 பாடல்கள்
676. தௌ மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்கள்
உள் நட்ட குவளை போலும் உருவக் கண் வெருவி ஆட
விண் விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல்மணிக் கழலி னார்க்கே
விளக்கவுரை :
677. செங் கதிர்ச் சிலம்பு செம் பொன் கிண்கிணி சிலம்பக் கோதை
பொங்கப் பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்பப் போர்த்த
குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள்
விளக்கவுரை :
[ads-post]
678. மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க
அரங்கின் மேல் இவளைத் தந்த தாய் கொலோ கயத்தி அன்றேல்
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர் கொலோ கயவர் சொல்லீர்
விளக்கவுரை :
679. அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லின்
பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இதுகண்டும் உளளே பாவம்
விளக்கவுரை :
680. தேந் தாமம் செம் பவளத் தாமம் செம் பொன் எரி தாமம் மின்னுத்திரள் தாமங்கள்
தாம்தாம் தாம் எனத் தாழ்ந்த பொன் மேகலைத் தாம அரங்கின்மேல் தாது ஆர் முல்லைப்
பூந் தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர்மகள் என்பாரும் ஆயினாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 676 - 680 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books