சீவக சிந்தாமணி 686 - 690 of 3145 பாடல்கள்
686. தேன் உடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி
ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்குக்
கான் உடை மாலை தன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே
விளக்கவுரை :
687. கலையினில் கன்னி நீக்கித் தாமரைக் கண்கள் தம்மால்
முலையினில் எழுதிச் செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும்
சிலை வலாய் புல்லு நம்பி சீவக சாமியோ என்று
அலை கடல் புலம்பின் நோவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்
விளக்கவுரை :
[ads-post]
688. பிறன் நலம் அரற்றக் கேட்டும் பீடினால் கனிந்த காம
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்தொடிக்கு உருகிப் பின்னும்
திறன் அல தமர்க்குச் செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்
விளக்கவுரை :
689. விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இந் நல்நகர்க்கு மன்னனோ
உலம் கலந்த தோளினீர் நீர் உரைமின் நீவிர் என்னவே
விளக்கவுரை :
690. மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மாநகர்க்குள் ஆயிரர்
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 686 - 690 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books