சீவக சிந்தாமணி 631 - 635 of 3145 பாடல்கள்
631. ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் படக் கையை மெய்வழி வீசித்
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
ஓரும் நடந்தன ஒண்தொடி முன்னே
விளக்கவுரை :
632. வட்டச் சூரையர் வார் முலைக் கச்சினர்
பட்டு வீக்கிய அல்குலர் பல்கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்
விளக்கவுரை :
[ads-post]
633. வம்பு வீக்கி வருமுலை உள் கரந்து
அம்பின் நொய்யவர் ஆண் உடைத் தானையர்
பைம் பொன் கேடகம் வாளொடு பற்றுபுளளள
செம் பொன் பாவையைச் சேவித்து முன்னினர்
விளக்கவுரை :
634. ஆணை ஆணை அகலுமின் நீர் என
வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணை இன்று எமதே என்று அணிநகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே
விளக்கவுரை :
635. கண்ணி னோடு பிறந்தது காரிகை
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 631 - 635 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books