சீவக சிந்தாமணி 581 - 585 of 3145 பாடல்கள்
581. தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சைக்
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கனமணிக் குழையினானே
விளக்கவுரை :
582. தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு காதல்
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவத் தார் குழையப் புல்லிப்
பாடிரும் பௌவம் முந்நீர்ப் பட்டது பகர்தலோடும்
நாடகம் நாங்கள் உற்றது என்று கை எறிந்து நக்கார்
விளக்கவுரை :
[ads-post]
583. கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்க்
கட்டு அவிழ் தாரினான் தன் கடிமனை மகிழ்ந்து புக்கான்
விளக்கவுரை :
584. பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கித் தோன்றும்
திரு நுதல் மனைவி செம் பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரியப் புல்லிக்
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்
விளக்கவுரை :
585. சந்திர காந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
வெந்து எரி பசும் பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்திப்
பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 581 - 585 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books