சீவக சிந்தாமணி 446 - 450 of 3145 பாடல்கள்
நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்
446. மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே.
விளக்கவுரை :
சீவகன் வேடர்களுடன் போரிடுதல்
447. கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே.
விளக்கவுரை :
[ads-post]
448. கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே.
விளக்கவுரை :
வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்
449. ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்.
விளக்கவுரை :
450. புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே.
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 446 - 450 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books