சீவக சிந்தாமணி 261 - 265 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 261 - 265 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்

261. நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான்.

விளக்கவுரை :

262. கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே.

விளக்கவுரை :

[ads-post]

263. பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே.

விளக்கவுரை :

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்


264. நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான்.

விளக்கவுரை :

265. திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books