சீவக சிந்தாமணி 396 - 400 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 396 - 400 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

396. வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான்.

விளக்கவுரை :

397. உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால்
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான்.

விளக்கவுரை :

[ads-post]

398. பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே.

விளக்கவுரை :

399. புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார்.

விளக்கவுரை :

400. கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books