சீவக சிந்தாமணி 476 - 480 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 476 - 480 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

476. கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்.

விளக்கவுரை :


477. குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்.

விளக்கவுரை :

[ads-post]

478. வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்.

விளக்கவுரை :

479. பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்.

விளக்கவுரை :

480. வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல்
தீம் சொல்லள் உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books