சீவக சிந்தாமணி 301 - 305 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 301 - 305 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

301. மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே.

விளக்கவுரை :

302. வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்.

விளக்கவுரை :

[ads-post]

303. உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள்.

விளக்கவுரை :


304. இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே.

விளக்கவுரை :

305. பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books