ஆசாரக்கோவை 96 - 100 of 100 பாடல்கள்



ஆசாரக்கோவை 96 - 100 of 100 பாடல்கள்

96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் (இன்னிசை வெண்பா)

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.

விளக்கவுரை :

97. சான்றோர் முன் சொல்லும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.

விளக்கவுரை :

98. புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.

விளக்கவுரை :

99. அறிவினர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.

விளக்கவுரை :

100. ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை வெண்பா)

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.

விளக்கவுரை :

ஆசாரக் கோவை முற்றிற்று

ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார், aasarakovai, peruvayin mulliyar, tamil books