நாலடியார் 386 - 390 of 400 பாடல்கள்



நாலடியார் 386 - 390 of 400 பாடல்கள்

386. உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

விளக்கவுரை :

387. கருங்கொள்ளுங் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டாறாம் ஊரன் ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்.

விளக்கவுரை :

388. கொடியவை கூறாதி பாணநீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.

விளக்கவுரை :

389. சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரான்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.

விளக்கவுரை :

390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று¦
பரும்பொய் உரையாதி, பாண கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.

விளக்கவுரை :

நாலடியார், சமண முனிவர்கள், naladiyaar, samana munivarkal, tamil books