ஆசாரக்கோவை 1
- 5 of 100 பாடல்கள்
1. ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி
யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு
ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்
தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய
ஆசார வித்து
விளக்கவுரை :
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு
நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை
மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால்
இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம்
பிழையா தவர்.
விளக்கவுரை :
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை
வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால்
ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும்
ஆகா கெடும்.
விளக்கவுரை :
4. முந்தையோர் கண்ட நெறி (இன்னிசை
வெண்பா)
வைகறை
யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும்
ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும்
தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர்
கண்ட முறை.
விளக்கவுரை :
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார்
தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந்
தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால்
தீண்டாப் பொருள்.
விளக்கவுரை :
