பழமொழி நானூறு 76 - 80 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 76 - 80 of 400 பாடல்கள்

76. எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார் மாணா வினை'.

விளக்கவுரை :

77. தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்
சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
'வில்லோடு காக்கையே போன்று'.

விளக்கவுரை :

78. மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !
'கடலொடு காட்டொட்டல் இல்'.

விளக்கவுரை :

79. நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு) ஏயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரையா கன்றூட்டும் மலைநாட! 'மாயா
நரையான் புறத்திட்ட சூடு'.

விளக்கவுரை :

80. கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
'குன்றின்மேல் இட்ட விளக்கு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books