பழமொழி நானூறு 71 - 75 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 71 - 75 of 400 பாடல்கள்

71. மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.

விளக்கவுரை :

72. இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை நாட ! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.

விளக்கவுரை :

73. கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன றறிவாரின் மாணமிக நல்லால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்'.

விளக்கவுரை :

74. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.

விளக்கவுரை :

75. பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books