பழமொழி நானூறு 66 - 70 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 66 - 70 of 400 பாடல்கள்

66. தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'.

விளக்கவுரை :

67. தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.

விளக்கவுரை :

68. பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை
நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
'நிரையுள்ளே இன்னா வரைவு'.

விளக்கவுரை :

10. சான்றோர் இயல்பு

69. நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
'தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர்'.

விளக்கவுரை :

70. ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books