பழமொழி நானூறு 56 - 60 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 56 - 60 of 400 பாடல்கள்

56. கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
பொய்யாகத் தம்மை பொருளல்லார் கூறுபவேல்
மையார உண்டகண் மாணிழாய் ! என்பரிவ
'செய்யாத செய்தா வெனில்?'

விளக்கவுரை :

57. ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்
முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப்
'பசுக்குத்தின் குத்துவார் இல்'.

விளக்கவுரை :

58. நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ
'தீயில்லை ஊட்டும் திறம்'.

விளக்கவுரை :

59. சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்
வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே
'தானோன் றிடவரும் சால்பு'.

விளக்கவுரை :

8. பெரியாரைப் பிழையாமை

60. அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! 'குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books