களவழி நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்

6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை
யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி
யங்கண் விசும்பி னுருமெறித் தெங்கும்
பெருமலை தூறெறிந் தற்றே யருமணிப்
பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்
தெவ் வேந்தரை யட்ட களத்து.

விளக்கவுரை :

7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி
இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண்
வரிவரான் மீன்பிறழுங் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து.

விளக்கவுரை :

8. யானைமேல் யானை நெரிதர வானாது
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப - எவ்வாயும்
எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

9. மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில் சுறபிறழ்வ போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து.

விளக்கவுரை :

10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா
தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்
செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து.

விளக்கவுரை :

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books